சினிமா
கமல்ஹாசன்

அரசியலை தூக்கி எறிந்துவிட்டு கலை பயணத்தை தொடருங்கள் - கமலுக்கு பிரபல இயக்குனர் வேண்டுகோள்

Published On 2021-05-14 10:08 IST   |   Update On 2021-05-14 11:48:00 IST
கமல் சார், சினிமாவில் நீங்க ஒரு வரலாறு, அதையே தொடருங்கள் என பிரபல இயக்குனர் சமூக வலைதளம் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் தோல்வியை தழுவினார். கமல்ஹாசன், பாரதீய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அவரது கட்சி சார்பில் போட்டியிட்ட அனைவரும் தோல்வியை தழுவினர். 

தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். மகேந்திரன், சந்தோஷ் பாபு மற்றும் பத்மபிரியா ஆகியோர் அக்கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், அரசியலை தூக்கி எறிந்துவிட்டு சினிமா பயணத்தை தொடருமாறு திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். 



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “கமல் சார். சினிமாவில் நீங்க ஒரு வரலாறு. அதையே தொடருங்கள். கொள்கை தெளிவில்லாத அரசியல் இப்படித்தான் இருக்கும். அரசியலை தூக்கி எறிந்துவிட்டு கலை பயணத்தை தொடருங்கள். சென்னையில் ஒரு மாபெரும் படப்பிடிப்பு தளம் இல்லை. இதற்காக போரடுங்கள். இதை செய்தாலே வரலாறு பேசும் உங்களை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Similar News