சினிமா
மு.க.ஸ்டாலின், ஷங்கர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அமல்படுத்திய அந்த 2 திட்டங்கள் அருமை - இயக்குனர் ஷங்கர் பாராட்டு

Update: 2021-05-07 12:31 GMT
முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் ஷங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று  பதவியேற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவையும் இன்று பதவியேற்றது. 

முதன்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு அரசியல்வாதிகளும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்குவதற்கான அரசாணையிலும், நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான அரசாணையிலும் கையெழுத்திட்டதற்காக பாராட்டுக்கள்” என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News