சினிமா
மு.க.ஸ்டாலின், பார்த்திபன்

மு.க.ஸ்டாலின் மட்டும் முதல்வர் அல்ல, நானும் முதல்வனே - தன் ஸ்டைலில் வாழ்த்திய பார்த்திபன்

Published On 2021-05-03 16:36 IST   |   Update On 2021-05-03 16:36:00 IST
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று முதல்வராக உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பார்த்திபன் தன் ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

இதனைத் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைக்க உள்ள தி.மு.க.விற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.



அந்தவகையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளதாவது: “இன்று... உதிக்கும் சூரியன், புதிய சூரியனல்ல... உதய சூரியன். நீண்ட காலம் ஆண்ட, பத்தாண்டு பொறுமை சின்னத்தின் முதல்வராக ஆட்சி புரிந்தவர் இனி, இனிய தமிழக முதல்வராக. வாழ்த்துகள் திமுகவின் அபரிமித வெற்றிக்கும், மாண்புமிகு ‘உதய்’சூரியனுக்கும்” என அவர் பதிவிட்டிருந்தார் 

மற்றொரு டுவிட்டில் “மு.க.ஸ்டாலின் அவர்கள் மட்டும் முதல்வர் அல்ல, நானும் முதல்வனே. கோவையில் இன்றைய முதல்வருக்கு அன்றே “அடுத்துத் தாங்களே”- என மஞ்கள் துண்டு அணிவித்து வாழ்த்தியதில் முதல்வன் ஆனேன்” என பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.

Similar News