சினிமா
பிக்ரம்ஜித் கன்வர்பால்

கொரோனா சிகிச்சை பெற்று வந்த அஞ்சான் பட நடிகர் காலமானார்

Published On 2021-05-01 12:38 IST   |   Update On 2021-05-01 12:38:00 IST
தமிழில் அஞ்சான் மற்றும் இந்தியில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் இன்று கொரோனாவால் உயிரிழந்தார்.
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் உயிரிழந்துள்ளார்.

இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தியில் பல படங்களில் நடித்து மிகப் பிரபலமானவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 



இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு வயது 52. இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News