சினிமா
சங்கர்

பாலிவுட் நடிகரை இயக்கும் சங்கர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Update: 2021-04-14 06:53 GMT
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக இருக்கும் சங்கர், அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகரை வைத்து புதிய படம் இயக்க இருக்கிறார்.
சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் சங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.இந்நிலையில், இயக்குனர் சங்கர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘அந்நியன்’ படத்தின் தழுவலாக உருவாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு 2022 ஆண்டு தொடங்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News