சினிமா
ஆர்யா

‘சார்பட்டா பரம்பரை’-யை அறிமுகம் செய்து வைத்த பா.இரஞ்சித்

Published On 2021-03-29 07:48 IST   |   Update On 2021-03-29 07:51:00 IST
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் முக்கிய அப்டேட்டை பா.இரஞ்சித் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’. வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பா.இரஞ்சித். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் பற்றிய முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆர்யா - கபிலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாயகி துஷாரா விஜயன் - மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்திலும், பசுபதி - ரங்கன் வாத்தியாராகவும், ஜான் கொக்கன் - வேம்புலியாகவும், கலையரசன் - வெற்றி செல்வனாகவும், சந்தோஷ் - ராமனாகவும், காளி வெங்கட் - கோனியாகவும் நடித்துள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளனர். 

Similar News