சினிமா
கே.எஸ்.ரவிகுமார்

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் கே.எஸ்.ரவிகுமார் திரைப்படம்

Published On 2021-03-27 18:42 IST   |   Update On 2021-03-27 18:42:00 IST
கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
2020-ல் ‘லாக்கப்’, ‘கபெ.ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ ஆகிய படங்கள் ஜீ5 தளத்தில் வெளியானது. தற்போது மதில் என்னும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரபல இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். ‘மதில்’ படத்தில் மைம் கோபி, 'பிக்பாஸ்' மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, 'லொள்ளு சபா' சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 



மதில் திரைப்படம் தமிழ் நாட்டில் அடிக்கடி நிகழும் முக்கிய பிரச்சனை பற்றி பேசுகிறது. கடினமாக உழைத்து, சேமித்து அதன் மூலம் சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் அனைவரின் கதை இது. இப்படம் ஏப்ரல் 14 அன்று ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

Similar News