சினிமா
மதன் கார்க்கி

அவருக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிக்கிறது - மதன் கார்க்கி

Published On 2021-03-23 16:34 IST   |   Update On 2021-03-23 16:34:00 IST
தலைவி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, தேசிய விருது வென்ற கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
2019-ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 7 விருதுகளை தமிழ்த் திரையுலகம் வென்றுள்ளது. அசுரன் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருதும், சூப்பர் டீலக்ஸ் படத்துக்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகர் விருதும், விஸ்வாசம் படத்திற்காக டி இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும், ஒத்த செருப்பு படத்துக்கு 2 தேசிய விருதுகளும் அறிவிக்கப்பட்டன.



இந்நிலையில் தலைவி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி, தேசிய விருது வாங்கிய கலைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அசுரன் படத்தின் பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்காதது தனக்கு வருத்தத்தை தந்ததாகவும் கூறினார். வரும் ஆண்டுகளில் ஜிவி பிரகாஷுக்கு நிறைய விருதுகள் கிடைக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

Similar News