சினிமா
எஸ்.பி.ஜனநாதன்

எஸ்.பி.ஜனநாதன் வீட்டில் நடந்த மற்றொரு சோகம்

Published On 2021-03-17 15:49 IST   |   Update On 2021-03-17 15:49:00 IST
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்து 2 நாட்கள் ஆன நிலையில், அவரது வீட்டில் மற்றொரு சோகம் நடந்துள்ளது.
இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணியின் போது உடல் நலக்குறைவு காரணமாக எஸ்.பி.ஜனநாதன் காலமானார். 

இவரது மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர். நடிகர்கள், நடிகைகள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, பின்னர் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டு கண்ணீர் மல்க விடைக்கொடுத்தார்.



எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் சோகம் தாங்காமல் மாரடைப்பு காரணமாக அவரது தங்கை லட்சுமி நேற்று உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு மரணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Similar News