சினிமா
அமீர்கான்

இதுதான் கடைசி - நடிகர் அமீர்கானின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published On 2021-03-16 09:17 IST   |   Update On 2021-03-16 09:17:00 IST
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அமீர்கான் எடுத்த திடீர் முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர்கான். இவர் கடந்த 14-ந் தேதி தனது 56 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக அமீர்கானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இதையடுத்து வாழ்த்திய அனைவருக்குமே நேற்று டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்த அமீர்கான், தான் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “எனது பிறந்த நாளில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பிற்கு நன்றி. அதில் என் மனம் நிறைந்துவிட்டது. இதுதான் எனது கடைசி சமூக வலைதளப் பதிவு. சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருப்பதாகக் கருதி, நான் அதிலிருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளேன்.



இதற்கு முன் இருந்தது போலவே தொடர்பில் இருப்போம். அமீர்கான் புரொடக்‌ஷன்ஸ் என்கிற அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளோம். ஆகையால், என் எதிர்கால அப்டேட்கள், படங்கள் தொடர்பான விவரங்கள் அனைத்தும் அந்த பக்கத்தில் பதிவேற்றப்படும்’ என அமீர்கான் தெரிவித்துள்ளார். 

Similar News