சினிமா
சுரேஷ் கோபி

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி

Published On 2021-03-15 07:51 IST   |   Update On 2021-03-15 07:51:00 IST
சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரபல நடிகர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.

அதில் தீனா, சமஸ்தானம், ஐ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த நடிகர் சுரேஷ் கோபி, திருச்சூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரது ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.



இந்த நிலையில் சமீபத்தில் நடந்த படப்பிடிப்பில் சுரேஷ்கோபி கலந்து கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் நிமோனியா காய்ச்சல் என தெரிய வந்தது. இதையடுத்து அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Similar News