சினிமா
நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவின் நிச்சயதார்த்த புகைப்படம்

அரசியல்வாதியுடன் தனுஷ் பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்

Published On 2021-03-13 15:00 IST   |   Update On 2021-03-13 15:00:00 IST
நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தில் நடித்தார். பின்னர் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது.


 
ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நேற்று இரவு இவர்களது நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. இந்தாண்டு இறுதிக்குள் இவர்களது திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. மெஹ்ரீன் பிர்சாடாவின் காதலர் பவ்யா பிஷ்னோயும் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News