சினிமா
மோகன்லால்

கொரோனா தடுப்பூசி போட்ட மோகன்லால்

Published On 2021-03-11 07:35 IST   |   Update On 2021-03-11 07:35:00 IST
மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால், தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். 

இந்த நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. 

இதுகுறித்து மோகன்லால் கூறும்போது, “கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக்கொண்டேன். அரசின் அறிவுரையை ஏற்று அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி சமூகத்தின் பாதுகாப்புக்கானது. கொரோனாவுக்கு விரைவாக தடுப்பு மருந்து கண்டுபிடித்த நிறுவனங்களுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி” என்றார்.

Similar News