தொடர்புக்கு: 8754422764

மகளிர் தின ஸ்பெஷல் - கோலிவுட்டில் கோலோச்சிய பெண் இயக்குனர்கள்


அனிதா உதீப்

2009-ம் ஆண்டு குளிர் 100 டிகிரி என்கிற படத்தினை இயக்கி பிரபலமானவர் அனிதா உதீப். இதையடுத்து 90 எம்.எல் எனும் திரைப்படத்தை இயக்கி, தமிழ் திரையுலகில் பல சர்ச்சைகளில் சிக்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஐஸ்வர்யா தனுஷ்

நடிகர் ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், தனது கணவர் தனுஷ் நடித்த 3 படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதனைத் தொடர்ந்து வை ராஜா வை போன்ற படங்களை இயக்கினார். சவுந்தர்யா ரஜினி

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா, ரஜினியை வைத்து கோச்சடையான் எனும் அனிமேஷன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனரானார். இதுதவிர வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார்.

ஹலீதா ஷமீம்

இயக்குனர்கள் மிஷ்கின், புஷ்கர் காயத்ரி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஹலீதா ஷமீம். 2014-ம் ஆண்டில் பூவரசம் பீப்பி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனரானார். 2019-ம் ஆண்டு சமுத்திரக்கனி, சுனைனா ஆகியோரை வைத்து இவர் இயக்கிய சில்லு கருப்பட்டி எனும் ஆந்தாலஜி படம் விமர்சன ரீதியாக பேசப்பட்டது. அண்மையில் இவர் இயக்கத்தில் வெளியான ஏலே திரைப்படமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இவர் தற்போது இயக்கி வரும் மின்மினி எனும் படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏனெனில் மின்மினி படத்தில் குழந்தை பருவ காட்சிகளில் நடித்திருந்தவர்களே, பதின்ம வயது காட்சிகளிலும் நடிக்க வேண்டும் என்பதால், அவர்கள் வளர்வதற்காக 5 ஆண்டுகள் காத்திருந்து எஞ்சியுள்ள காட்சிகளை அவர் படமாக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர, வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி, கே.டி.படத்தை இயக்கிய மதுமிதா, மாலினி 22 பாளையங்கோட்டை படத்தை இயக்கிய நடிகை ஸ்ரீபிரியா, ராஜா மந்திரி படத்தை இயக்கிய உஷா கிருஷ்ணன் என இன்னும் சில பெண் இயக்குனர்கள் தமிழ் திரையுலகில் பல சாதனைகளை படைக்க தயாராகி வருகின்றனர்.