சினிமா
ஷங்கர், புகழ்

இயக்குனர் ஷங்கர் ஆபிஸில் இருந்து பேசுவதாக வந்த அழைப்பு - ஆசையுடன் சென்று ஏமாற்றமடைந்த புகழ்

Published On 2021-03-07 11:42 IST   |   Update On 2021-03-07 11:49:00 IST
நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் கோமாளி, நிஜத்திலும் அல்ல என ‘குக் வித் கோமாளி’ புகழ் உருக்கமாக பேசியுள்ளார்.
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் புகழ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். சந்தானத்துடன் ஒரு படம், அருண் விஜய்யுடன் ஒரு படம் என நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் அஜித் நடித்து வரும் வலிமை படத்திலும் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இயக்குனர் ஷங்கர் பெயரில் தன்னை ஒருவர் ஏமாற்றியது குறித்து உணர்வுப் பூர்வமாகப் பேசியுள்ளார்.



அதில் ‘ஒருநாள் இயக்குனர் ஷங்கரின் அலுவலகத்திலிருந்து பேசுவதாக எனக்கு ஒரு போன் வந்தது. போனில் பேசியவர் கிண்டியில் உள்ள ஒரு இடத்திற்கு என்னை வரச் சொன்னார். நான் அங்கே சென்று அவரை அழைத்த போது அந்த போன் எண் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஏமாற்றமடைந்த புகழ், நிகழ்ச்சியில் மட்டும்தான் நான் கோமாளி, நிஜத்திலும் அல்ல’ என உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.

Similar News