தமிழ்ப்படம் மூலம் மிகவும் பிரபலமான மிர்ச்சி சிவா நடிக்கும் புதிய படத்தில் அஜித் பட நடிகை இணைந்திருக்கிறார்.
சிவாவுடன் இணைந்து நடிக்கும் அஜித் பட நடிகை
பதிவு: மார்ச் 04, 2021 17:28
சிவா
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட திரையுலகில் மாடல் மற்றும் நடிகையாக விளங்குபவர் அக்ஷரா கவுடா. இவர் தமிழில் உயர்திரு 140 படத்தில் அறிமுகமானார், அதன் பின்னர் விஜய்யின் துப்பாக்கி, அஜித்தின் ஆரம்பம், ஜெயம் ரவி, அரவிந்த் சாமி நடித்த போகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக ஆரம்பம் படத்தில் அவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது அக்ஷரா கவுடா, மிர்ச்சி சிவா நடிக்கும் இடியட் எனும் படத்தில் நடிக்கிறார். மேலும் ரெஜினா நடிப்பில் உருவாகும் சூர்ப்பனகை படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அக்ஷரா கவுடா நடிக்கிறார்.
Related Tags :