சினிமா
அமீர்

நீக்கிய காட்சிகளை சேர்த்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அமீர் பட இயக்குனர்

Published On 2021-03-01 15:31 IST   |   Update On 2021-03-01 15:31:00 IST
அமீரை வைத்து ஒரு படத்தை இயக்கி இருக்கும் பிரபல இயக்குனர், நீக்கிய காட்சிகளை சேர்த்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.
இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் நாற்காலி படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. இந்த படத்தை 7 வருடங்களுக்கு முன்பு பேரன்பு கொண்ட பெரியோர்களே என்ற பெயரில் இயக்கிய சந்திரன் 40 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் விலகினார். பின்னர் தலைப்பை எம்.ஜி.ஆர் பாண்டி என்று மாற்றி படத்தின் தயாரிப்பாளர் ஆதம்பாவா சில காட்சிகளையும், அமீர் சில காட்சிகளையும் இயக்கினர்.

பின்னர் இயக்குனர் வி.இசட் துரையிடம் படத்தை இயக்கும் பொறுப்பை ஒப்படைத்தனர். அவர் கதையில் யாரும் தலையிடக்கூடாது என்று உறுதிமொழி பெற்று படத்துக்கு நாற்காலி என்று பெயர் வைத்தார். ஏற்கனவே எடுத்த காட்சிகள் சிலவற்றை பிளாஷ்பேக்காக வைத்து கதையில் மாற்றங்கள் செய்து படப்பிடிப்பை முடித்தார்.



ஆனால் துரை நீக்கிய காட்சிகளை மீண்டும் அவருக்கு தெரியாமல் படத்தில் சேர்த்து விட்டதாக சர்ச்சைக்கிளம்பியுள்ளது. இதனால் அதிருப்தியில் இருக்கிறார் துரை. இருட்டு வெற்றி படத்தை கொடுத்த துரைக்கு இந்த மனஉளைச்சல் தேவையா என்று திரை உலகினர் முணுமுணுக்கின்றனர்.

Similar News