சினிமா
பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் மணிரத்னம்

50 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நிறைவு... அடுத்த கட்டத்திற்கு சென்ற பொன்னியின் செல்வன்

Published On 2021-02-28 18:27 IST   |   Update On 2021-02-28 18:27:00 IST
ஐதராபாத்தில் தொடர்ந்து 50 நாட்களாக நடைபெற்று வந்த பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 



ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்குகிறார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு 9 மாத இடைவெளிக்கு பின் கடந்த மாதம் ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து 50 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்துள்ளது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பை ஜெய்ப்பூரில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளாராம்.

Similar News