சினிமா
சிம்பு

வைரலாகும் சிம்புவின் ‘மாநாடு’ பட டீசர்

Published On 2021-02-03 14:50 IST   |   Update On 2021-02-03 14:50:00 IST
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள மாநாடு படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். 

இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை, தெலுங்கு, கன்னட, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.

இந்நிலையில், சிம்புவின் பிறந்தநாளான இன்று மாநாடு படத்தின் டீசரை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். பஞ்ச் வசனங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றாலும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த டீசராக இது அமைந்துள்ளது. 

மாநாடு படத்தின் தெலுங்கு டீசரை ரவி தேஜாவும், கன்னட டீசரை சுதீப்பும், மலையாள டீசரை பிரித்விராஜும், இந்தி டீசரை அனுராக் கஷ்யப்பும் வெளியிட்டனர்.

Similar News