சினிமா
விஜய்

மாஸ்டர் ஓடிடி ரிலீஸ் எதிரொலி... திரையரங்க உரிமையாளர்கள் புதிய நிபந்தனை

Published On 2021-02-03 07:50 GMT   |   Update On 2021-02-03 07:50 GMT
மாஸ்டர் படம் 16 நாட்களில் ஓடிடியில் வெளியிடப்பட்ட நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் புதிய நிபந்தனை விதித்துள்ளனர்.
விஜய்யின் மாஸ்டர் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பொதுவாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 50 நாட்களுக்கு பிறகே ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்யப்படும். ஆனால் மாஸ்டர் படம் வெளியான 16 நாட்களிலேயே ஓ.டி.டி.யில் வெளியிடப்பட்டது. இது திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனை நடத்தியது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, “திரையரங்க உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் பேசியதை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் லைசன்சை பிப்ரவரி 4-ந் தேதி இரவு வரை புதுப்பித்து தருவதாக தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டார்.



அதற்கு பிறகு படத்தை தொடர விரும்புகிறவர்கள் அந்தந்த மாவட்ட வினியோகஸ்தர்களிடம் பேசுங்கள். அவர்கள் படத்தை தொடர தேவையானதை செய்து கொடுப்பார்கள். மாஸ்டர் படத்துக்கு இப்படித்தான் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. 

சென்ற வாரம் வெளியான கபடதாரி படத்தை 30 நாட்கள் கழித்தே ஓ.டி.டி.யில் வெளியிடுவோம் என்று தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார். சிறிய படங்களுக்கு 30 நாட்களும், பெரிய படங்களுக்கு 50 நாட்களும் கேட்கிறோம். இது தொடர்பாக தயாரிப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.
Tags:    

Similar News