சினிமா
ஹிப்ஹாப் ஆதி

ஹிப்ஹாப் ஆதி இயக்கும் 2-வது படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்

Published On 2021-02-03 11:03 IST   |   Update On 2021-02-03 11:03:00 IST
மீசையை முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி அடுத்ததாக இயக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்‌ஷன் உள்பட பல படங்களுக்கு இசைமைத்துள்ளார். மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.  



இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி இயக்கும் 2-வது படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்திற்கு ‘சிவக்குமாரின் சபதம்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திலும் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அதேபோல் அஸ்வின் ராம் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்து வரும் அன்பறிவு படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News