தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக சிம்பு நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.
சங்கத்துக்காக சிம்பு நடிக்கும் புதிய படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பதிவு: பிப்ரவரி 02, 2021 21:01
சிம்பு
கொரோனா ஊரடங்கில் தனது உடல் எடையை முழுவதுமாகக் குறைத்து புதிய தோற்றத்துக்கு மாறிய சிலம்பரசன், சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார். அடுத்ததாக வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்காக புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இந்த புதிய படத்தை சிங்கார வேலன் தயாரிக்கிறார். வானம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி புகழ்பெற்ற ஞானகிரி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
இதற்கான படப்பிடிப்பு விரைவில் துவக்கப்பட்டு இந்த ஆண்டே படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :