சினிமா
சேவியர் பிரிட்டோ

மாஸ்டர் தயாரிப்பாளரின் அடுத்த படம் இவருடனா? - தீயாய் பரவும் தகவல்

Published On 2021-02-02 12:40 IST   |   Update On 2021-02-02 12:40:00 IST
விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, அடுத்ததாக தயாரிக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. சுமார் 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. மாஸ்டர் படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். மாஸ்டர் படம் கொடுத்த உத்வேகத்தால் அடுத்தடுத்து படங்களை அவர் தயாரிக்க உள்ளாராம்.



அந்த வகையில், சேவியர் பிரிட்டோ அடுத்ததாக தயாரிக்க உள்ள படத்தில், அவரின் மருமகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவுக்கும், அதர்வாவின் தம்பி ஆகாஷுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News