சினிமா
மகனுடன் ராஜ்கிரண்

இயக்குனராக அறிமுகமாகும் ராஜ்கிரண் மகன்

Published On 2021-02-01 15:03 IST   |   Update On 2021-02-01 15:09:00 IST
பிரபல நடிகர் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘ராசாவே உன்ன நம்பி’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக  களம் இறங்கியவர் ராஜ்கிரண். அதைத்தொடர்ந்து ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் நடிக்கத் தொடங்கி வெற்றிகரமாக இன்று வரை வலம் வந்து கொண்டிருக்கிறார்.  


இந்நிலையில் நடிகர் ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ராஜ்கிரண், “இறை அருளால், இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது அவர்களின் இருபதாவது பிறந்த நாள்.  ‘என் ராசாவின் மனசிலே’ இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். அவரே படத்தை இயக்கவும் உள்ளார். அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குனராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Similar News