சினிமா
விஜய் சேதுபதி

விருதுகளை குவித்த படத்திற்கு உதவிய விஜய் சேதுபதி

Published On 2021-01-30 17:37 IST   |   Update On 2021-01-30 17:37:00 IST
பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று இதுவரை 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்ற திரைப்படத்திற்கு விஜய் சேதுபதி உதவி செய்துள்ளார்.
தயாரிப்பாளர் முதல் இசையமைப்பாளர் வரை முற்றிலும் புதுமுகங்களின் முயற்சியாக தயாராகி உள்ளது “வாய்தா” திரைப்படம். அறிமுக இயக்குநர் மகிவர்மன் C.S. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் வாய்தா படம் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகிறார். 

‘ஜோக்கர்’, ‘கே.டி. என்கிற கருப்பத்துரை’ படம் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர், அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’ புகழ் பிரசன்னா மற்றும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவைச் சேர்ந்த கலைஞர்கள் சிலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 



இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை விஜய் சேதுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘வாய்தா’ திரைப்படம் இதுவரை 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News