ஜெயலலிதா வேடத்தில் நடித்து வரும் கங்கனா ரனாவத் அடுத்ததாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்க இருக்கிறார்.
முதலமைச்சரை தொடர்ந்து பிரதமராக நடிக்கும் கங்கனா ரனாவத்
பதிவு: ஜனவரி 30, 2021 15:14
கங்கனா ரனாவத்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து, ஏ.எல். விஜய் இயக்கும் 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் வேடத்தில், தான் நடிக்கவுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது 'நான் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கும் அரசியல் படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல. ஆனால் அரசியல் வரலாற்றுப் படம். பல முக்கியமான நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
இந்திய அரசியலின் முக்கியமான தலைவரின் வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஒரு புத்தகத்தின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார். ரிவால்வர் ராணி படத்தில் கங்கனாவுடன் இணைந்து பணியாற்றிய சாய் கபீர், இந்திரா காந்தி தொடர்பான இப்படத்தை இயக்கவுள்ளார்.
Related Tags :