சினிமா
ராம் கோபால் வர்மா

ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பெனி’ - 5 மொழிகளில் வெளியாகிறது

Published On 2021-01-29 11:48 IST   |   Update On 2021-01-29 11:48:00 IST
ராம் கோபால் வர்மா இயக்கி உள்ள ‘டி கம்பெனி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது
ராம் கோபால் வர்மா தற்போது  'டி கம்பெனி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தாவூத் இப்ரஹிம் கஸ்காரின் டி கம்பெனி பற்றியதுதான் இத்திரைப்படம். தாவூத் இப்ரஹிம், கடந்த 1993-ல் நடந்த மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தேடப்படும் முக்கியக் குற்றவாளி என்பது அனைவரும் அறிந்த கதையே. 

கடந்த 2002-ல் 'கம்பெனி' என்றொரு திரைப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கினார். இத்திரைப்படம் தாவூத் இப்ரஹிம், சோட்டா ராஜன் பற்றி அரசல்புரசலாக வெளிவந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 



ஆனால், இப்போது உருவாகியுள்ள 'டி கம்பெனி' திரைப்படமானது கராச்சியில் உள்ள தாவூத் இப்ரஹிம், சோட்டா ராஜனின் நெருங்கியக் கூட்டாளிகள் சொன்ன உண்மைக் கதைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் ஸ்னீக் பீக் அண்மையில் வெளியாகி டிஜிட்டல் தளங்களில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், ஃப்ர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. 

Similar News