தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஆனந்தி தற்போது ஏமாலி பட நடிகர் சாம் ஜோன்சுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
ஏமாலி பட நடிகருக்கு ஜோடியான ஆனந்தி
பதிவு: ஜனவரி 28, 2021 19:51
ஆனந்தி
ஏமாலி, தர்மபிரபு, லியா படங்களில் நாயகனாக நடித்தவர் சாம் ஜோன்ஸ். மதுரையை கதைக்களமாக கொண்டு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் படத்தை அவர் தயாரித்து நாயகனாக நடிக்கிறார். இதில் சாம் ஜோன்சுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தாமரை செல்வன் இயக்குகிறார். இப்படத்தின் கதையை நடிகர் சாம் ஜோன்ஸின் தந்தை எம்.ஜோன்ஸ் எழுதியுள்ளார். கதையின் முக்கியதுவத்தை உணர்ந்து இப்படத்தை நடிகர் சாம் ஜோன்ஸ் தனது தயாரிப்பு நிறுவனம் “மாஸ் சினிமாஸ்” சார்பாக தயாரிக்கிறார்.
தெலுங்கு நடிகை சுலேகவாணி, முனிஸ்காந்த், வேலா ராமமூர்த்தி, ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவரை ஒப்பந்தம் செய்யவுள்ளதாக தயாரிப்பு தரப்பு சார்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :