சினிமா
திரையரங்கு

திரையரங்குகள் 50 சதவீதத்துக்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்கலாம் - மத்திய அரசு அனுமதி

Published On 2021-01-28 04:41 GMT   |   Update On 2021-01-28 04:41 GMT
திரையரங்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இருக்கைகளுடன் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. இதையடுத்து 8 மாதங்களுக்கு பின் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்ட திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்க வேண்டும் என்ற உத்தரவை மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்தன. தற்போது வரை அதே நடைமுறையே தொடர்ந்து வருகிறது.



இந்நிலையில், நாடு முழுவதும் பிப்ரவரி 28-ந் தேதி வரையிலான நிபந்தனைகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அரசு, திரையரங்குகள் 50 சதவீதத்துக்கும் மேலான இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News