தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு அடுத்ததாக நடிக்கும் படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடிக்க உள்ளார்.
சிம்புவுக்கு வில்லனாகும் கவுதம் மேனன்
பதிவு: ஜனவரி 28, 2021 09:21
சிம்பு, கவுதம் மேனன்
கன்னடத்தில் நாரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.
சிம்பு, கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என் கிருஷ்ணா இயக்க உள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர், அசுரன் நடிகர் டீஜே, கலையரசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் சிம்புவுக்கு வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல இயக்குனர் கவுதம் மேனன், வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். பத்து தல படத்தின் இயக்குனர் ஓபிலி என் கிருஷ்ணா இயக்குனர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :