ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பால் போனி கபூர் அதிருப்தி அடைந்துள்ளாராம்.
‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது போனி கபூர் அதிருப்தி
பதிவு: ஜனவரி 27, 2021 13:47
போனி கபூர், ராஜமவுலி
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தில், ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியா பட் உள்பட பலர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் இப்படம் வருகிற அக்டோபர் 13-ந் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு சில தினங்களுக்கு முன் வெளியிட்டது.
இந்நிலையில், பிரபல தயரிப்பாளர் போனி கபூர் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு மீது அதிருப்தியில் உள்ளாராம். ஏனெனில் தான் தயாரித்துள்ள ‘மைதான்’ படம் வெளியாகும் அதே வாரத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை வெளியிடுவது விரும்பத்தகாத ஒரு நிகழ்வு என அவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். ‘மைதான்’ படம் வரும் அக்டோபர் 15-ந் தேதி வெளியாகும் என்று கடந்தாண்டே அறிவித்து விட்டனர். இந்த இரு படங்களிலும் அஜய் தேவ்கன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :