பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமான ரம்யா பாண்டியன், அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளாராம்.
பிக்பாஸ் ரம்யா பாண்டியனுக்கு அடித்தது ஜாக்பாட் - சூர்யா படத்தில் நடிக்கிறார்
பதிவு: ஜனவரி 27, 2021 12:48
சூர்யா, ரம்யா பாண்டியன்
தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இறுதிப்போட்டி வரை முன்னேறினார். இந்நிகழ்ச்சி மூலம் அவரது ரசிகர் வட்டம் பெரிதானது.
இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் அடுத்ததாக சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்க உள்ளார். இப்படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :