நடிகர் அஜித்தின் மகனான ஆத்விக்கின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’.... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட்டான புகைப்படங்கள்
பதிவு: ஜனவரி 27, 2021 11:18
ஆத்விக்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் அஜித் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகன் ஆத்விக்குடன் சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஆத்விக்கின் கியூட்டான புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்து வரும் அஜித் ரசிகர்கள், குட்டி தல என்ற ஹேஷ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர். நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.