தமிழில் பிசியான நடிகராக வலம்வரும் அருண் விஜய் அடுத்ததாக நடிகர் சூர்யா தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
சூர்யா படத்தில் நடிக்கும் அருண் விஜய்
பதிவு: ஜனவரி 26, 2021 15:50
சூர்யா, அருண் விஜய்
மூத்த நடிகர் விஜய்குமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய்யின் மகனுமாகிய அர்னவ், நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். குழந்தைகளை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை சரவ் சண்முகம் இயக்குகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் முதன்மை பாத்திரமான அர்னவிற்கு தந்தையாக நடிக்க, அவரது தந்தை அருண் விஜய் ஒப்பந்தமாகி உள்ளார்.
இது குறித்து இயக்குநர் சரவ் சண்முகம் கூறியதாவது: “இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் பெரும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப்படத்தில் அர்னவிற்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன் என முதலிலேயே கூறிவிட்டார். நான் திரைக்கதையை கூறிய பிறகு அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது.
ஒப்பந்தமாவதற்கு முன் தனது கதாப்பாத்திரம் குறித்து நிறைய கேட்டு தெரிந்து கொண்டார். தற்போது ஊட்டியில் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படம் உருவாகி வரும் விதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது. அர்னவ் மிகவும் துறுதுறுப்பான, உற்சாகம் கொண்ட திறன்மிகு நடிகர். இயல்பாகவே அவரிடம் நடிப்பு திறன் நிறைந்திருக்கிறது. இப்படம் மிக அழகாக உருவாகி வருகிறது” என கூறினார்.
Related Tags :