கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
பதிவு: ஜனவரி 17, 2021 16:48
கொரோனா குமார் பட போஸ்டர்
ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கோகுல். இப்படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்திருந்தார். பின்னர் காஷ்மோரா, ஜூங்கா போன்ற படங்களை இயக்கிய கோகுல், அடுத்ததாக ‘கொரோனா குமார்’ என்ற படத்தை இயக்க உள்ளார்.
இப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே வெளியானாலும், இதில் யார் ஹீரோவாக நடிக்கப்போகிறார் என்பதை படக்குழு அறிவிக்காமல் இருந்தது. இந்நிலையில், இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது முழுக்க முழுக்க காமெடி படம் என்பதால் இக்கதைக்கு சந்தானம் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.
Related Tags :