விஜய் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் மாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி... வைரலாகும் புகைப்படம்
பதிவு: ஜனவரி 15, 2021 17:41
ஆண்ட்ரியா
பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கும் நிலையில்,படத்தின் வெற்றியை மாஸ்டர் படக்குழு கொண்டாடி வருகிறது.
இதில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனனும் நடித்திருந்தார்கள். மேலும் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மாஸ்டர் படத்திற்காக வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவையும், புகைப்படங்களையும் ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.