சினிமா
விஜய்

வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’... 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்

Published On 2021-01-15 08:40 GMT   |   Update On 2021-01-15 08:40 GMT
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள மாஸ்டர் படத்தின் 2-ம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது.

கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால், ரசிகர்களை கடந்து திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

பொதுவாகவே விஜய்யின் படங்கள் இந்திய அளவில் வசூலில் சாதனை படைக்கும். ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும். மாஸ்டர் படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானதால் 2 நாட்களில் உலகம் முழுக்க ரூ. 80 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.



சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ. 1.21 கோடியும் 2-ம் நாளில் ரூ.1.05 கோடியும் என மொத்தம் ரூ. 2.26 கோடி வசூல் ஆகி இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க முதல் நாள் ரூ.25 கோடியும் இரண்டாம் நாள் ரூ.18 கோடியும் தொட்டுள்ளது. 2 நாட்களில் வசூல் தொகை ரூ.43 கோடியை தாண்டியுள்ளது.

இந்த வசூல் தொடர்ந்தால் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் 5 நாட்களில் தமிழக வசூல் ரூ.100 கோடியை தொடும் என்று திரையரங்கு அதிபர்கள் கூறியுள்ளனர். விஜய்யின் படங்களுக்கு தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பெரும் வரவேற்பு இருக்கும். தெலுங்கில் வெளியான மாஸ்டர் படம் முதல் நாளே ரூ.5.74 கோடியை வசூலித்தது. அடுத்த வாரத்துக்குள் மாஸ்டர் படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று திரையுலகம் எதிர்பார்க்கிறது.
Tags:    

Similar News