அந்தகாரம் படத்தின் வெற்றியை அட்லீ உள்ளிட்ட படக்குழுவினர் நட்சத்திர ஓட்டலில் கொண்டாடி உள்ளனர்.
அந்தகாரம் வெற்றி.... படக்குழுவினருடன் கொண்டாடிய அட்லீ
பதிவு: டிசம்பர் 17, 2020 11:00
அந்தகாரம் படக்குழு
இயக்குனர் அட்லீ தயாரித்த படம் ‘அந்தகாரம்’. அறிமுக இயக்குனர் விக்னராஜன் இயக்கியிருந்த இப்படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்திருந்தார். மேலும் வினோத் கிஷன், பூஜா ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிரதீப் குமார் இசையமைக்க, எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இப்படம் கடந்த மாதம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது. படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் படக்குழுவை பாராட்டினர்.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி உள்ளனர். இதற்காக நட்சத்திர ஓட்டலில் நடத்தப்பட்ட பார்ட்டியில் தயாரிப்பாளர் அட்லீ, அவரது மனைவி பிரியா, நடிகர்கள் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
Related Tags :