தெலுங்கு படவுலகில் மெகா ஸ்டாராக வலம் வரும் சிரஞ்சீவி வைத்து வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்கை இயக்கயிருக்கிறார் மோகன் ராஜா.
வெற்றி பெற்ற படத்தை சிரஞ்சீவியை வைத்து ரீமேக் செய்யும் மோகன் ராஜா
பதிவு: டிசம்பர் 16, 2020 20:11
மோகன் ராஜா - சிரஞ்சீவி
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'லூசிஃபர்'. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டது.
இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ராம் சரண் கைப்பற்றினார். மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிப்பது உறுதியானது. யார் இந்த படத்தை இயக்குவார் என்று கேள்விக்குறியாக இருந்தது.
இந்நிலையில், 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்கை மோகன் ராஜா இயக்கவுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
Related Tags :