பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகர் சரவணன் தற்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்திருக்கிறார்.
முதலமைச்சரை நேரில் சந்தித்த பிக்பாஸ் சரவணன்... காரணம் தெரியுமா?
பதிவு: டிசம்பர் 16, 2020 19:29
சரவணன் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
‘பொண்டாட்டி ராஜ்யம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து 90களில் கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் சரவணன். பருத்திவீரன் திரைப்படம் அவருக்கு சித்தப்பு என்ற பெயரை வழங்கியதோடு தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்யவும் முக்கிய காரணமாக அமைந்தது.
சரவணன் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டார். சில காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
அண்மையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற சரவணன், தற்போது மரியாதை நிமிர்த்தமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Related Tags :