சினிமா
திவ்யதர்ஷினி

இயக்குனரானார் தொகுப்பாளினி டிடி

Published On 2020-12-16 12:30 IST   |   Update On 2020-12-16 12:30:00 IST
பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி, தற்போது இயக்குனராக அறிமுகமாகி உள்ளார்.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான டிடி என்ற திவ்யதர்ஷினி, தமிழில் ஜூலி கணபதி, விசில், நளதமயந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்களை நேர்காணல் செய்த இவர் தமிழ்ப் படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். பவர் பாண்டி, சர்வம் தாளமயம் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இவர் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான என்னு நின்டே மொய்தீன் படத்தில் இடம்பெறும் முக்கத்து பெண்ணே பாடலை தமிழில் ஆல்பம் பாடலாக உருவாக்கி உள்ளனர். இதை டிடி தயாரித்து, இயக்கிதோடு மட்டுமல்லாமல் அவரே நடிக்கவும் செய்துள்ளார். நிகில் மேத்யூ பாடியுள்ள இந்தப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். 

Similar News