சினிமா
பார்த்திபன்

இந்திய திரைப்பட விழாவில் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்துக்கு விருது

Published On 2020-12-15 14:39 GMT   |   Update On 2020-12-15 14:39 GMT
பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு இந்திய திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா இன்று (செவ்வாய்கிழமை) அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் நடைபெற்றது. 

கடந்த 2019 ஆண்டில் சிறந்த திரைப்படமாக இயக்குனர் பார்த்திபனின் “ஒத்த செருப்பு” படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருதினை இயக்குனர் பார்த்திபனுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி வழங்கினார். விருதுக்கான பாராட்டு பத்திரத்துடன் ரூ.1 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.



அதையடுத்து அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கில் ஒத்த செருப்பு திரைப்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை இதே அரங்கில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு இதர மொழித் திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம்.

16-ந் தேதி வங்கமொழி திரைப்படம் ஜேஸ்தோபுத்ரா, 17-ந் தேதி மலையாளத் திரைப்படம் ஜல்லிக்கட்டு, 18-ந் தேதி தெலுங்கு திரைப்படம் எப்.2 பன் அண்டு ப்ரஸ்ட்ரேசன், 19-ந் தேதி இந்தி திரைப்படம் உரி த ஸர்ஜிகல் ஸ்ட்ரைக் ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.
Tags:    

Similar News