சினிமா
நடிகர் கிருஷ்ணா

நடிகர் கிருஷ்ணா மீது ரூ.10 லட்சம் மோசடி புகார் - போலீசார் விசாரணை

Published On 2020-12-11 09:17 IST   |   Update On 2020-12-11 09:17:00 IST
கழுகு படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணா மீது அசோக்நகர் காவல் நிலையத்தில் ரூ.10 லட்சம் மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கழுகு படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணா சென்னை கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனியில் வசித்து வருகிறார். இவரிடம் மேலாளராக வேலை பார்த்த திலீப் குமார் என்பவர், கிருஷ்ணா மீது அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில், நடிகர் கிருஷ்ணா தனது சொந்த தேவைக்காக என்னிடம் இருந்து ரூ.10 லட்சம் கடன் வாங்கினார். அந்த கடனை திருப்பித்தராமல் என்னை ஏமாற்றி விட்டார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து, எனக்கு தரவேண்டிய பணத்தை திரும்ப பெற்றுத்தரவேண்டும், என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அசோக்நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News