சினிமா
ஹேம்நாத், சித்ரா, ஷாலு ஷம்மு

அவர் மோசமானவர் - சித்ராவின் கணவர் குறித்து நடிகை ஷாலு ஷம்மு பகீர் பதிவு

Published On 2020-12-10 12:36 IST   |   Update On 2020-12-10 12:36:00 IST
சித்ராவின் கணவர் ஹேம்நாத் மோசமானவர் என நடிகை ஷாலு ஷம்மு பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக நடிகைகள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், நடிகை ஷாலு ஷம்மு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவில்,  “உன்னை இந்த வகையில் இழப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. 

நான் உன்னுடன் கடைசியாக பேசும்போது, வாழ்க்கைத் துணை தொடர்பான விவகாரத்தில், உன் மனதை மாற்ற முயற்சி செய்தேன். அதைநீ ஏற்கத் தயாராக இல்லை. இப்படி நடக்கும் என எனக்குத் தெரிந்திருந்தால், உன்னை தடுக்கும் முயற்சியை நான் நிறுத்தியிருக்கமாட்டேன். உன்னை இழந்த நேரத்தில் எங்கள் இதயம் நொறுங்கிவிட்டது சித்து” எனக் குறிப்பிட்டுள்ளார். 



மற்றொரு பதிவில் “எதிர் நபர் மோசமானவர் என்று நமக்குத் தெரிந்தாலும், ஏன் எப்போதும் காதல் கண்ணை மறைத்துவிடுகிறது” என குறிப்பிட்டுள்ளார். ஷாலு ஷம்முவின் இந்தப்பதிவு சித்ரா தற்கொலை விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News