சினிமா
காளிதாஸ், மேகா ஆகாஷ்

6 வருட காத்திருப்புக்கு முடிவு - ஒரு வழியாக ரிலீசுக்கு தயாரான ‘ஒரு பக்க கதை’

Published On 2020-12-09 08:47 IST   |   Update On 2020-12-09 08:47:00 IST
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் காளிதாஸ், மேகா ஆகாஷ் நடித்துள்ள ‘ஒரு பக்க கதை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதியின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், அந்த படத்திற்கு பின் ஒப்பந்தமான படம் ‘ஒரு பக்க கதை’. கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களில் முடிந்தாலும், சில காரணங்களால் படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை. 

இப்படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். அவர்கள் இருவருக்கும் இதுதான் அறிமுக படம். இருப்பினும் இப்படம் தாமதமானதால் அவர்கள் இருவரும் வேறு படங்கள் மூலம் அறிமுகமாகிவிட்டனர்.



இந்நிலையில், கடந்த 6 வருடங்களாக ரிலீசாகாமல் இருந்த இப்படம் வருகிற டிசம்பர் 25-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Similar News