சினிமா
கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’-ல் பணியாற்றிய ‘வலிமை’ பட பிரபலம் - குவியும் வாழ்த்துக்கள்
கிறிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ படத்தில் வலிமை பட பிரபலம் பணியாற்றியுள்ளதை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தன் நேர்த்தியான ஒளிப்பதிவால் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கக்கூடியவர் நிரவ் ஷா. இவர் தமிழில் போக்கிரி, தலைவா, 2.0, பில்லா, நேர்கொண்ட பார்வை என பல்வேறு சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இது தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வாரம் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் என்கிற ஹாலிவுட் படத்திலும் இவர் பணியாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. இப்படத்தின் சில காட்சிகள் இந்தியாவில் படமாக்கப்பட்டன. அதில் நீரவ் ஷா கூடுதல் கேமரா ஆபரேட்டராக பணிபுரிந்துள்ளார். டெனெட் படத்தின் இறுதியில் வரும் எண்ட் கார்டில் நீரவ் ஷாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.