சினிமா
விஜய்யின் செல்பி புகைப்படம்

சாதனை படைத்த விஜய் செல்பி - அதிகாரப்பூர்வமாக அறிவித்த டுவிட்டர்

Published On 2020-12-08 11:37 IST   |   Update On 2020-12-08 11:40:00 IST
சமூக வலைதளமான டுவிட்டரில் விஜய் பதிவிட்ட செல்பி புகைப்படம் சாதனை படைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளமான டுவிட்டரில் ஆண்டுதோறும் அதிக லைக்ஸ், ரீ டுவிட், அதிகம் பேசப்பட்ட வி‌ஷயம் என்ன என்பது பற்றி சர்வே எடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் நடிகர் விஜய்யின் செல்பி படம் அதிக அளவில் ரீ டுவிட் செய்யப்பட்டுள்ளது.

இந்த வருட தொடக்கத்தில் நடிகர் விஜய் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் நெய்வேலி ரசிகர்களுடன் செல்பி படம் எடுத்தார். அந்த படத்தை டுவிட்டரில் பகிர்ந்தார். இந்த செல்பி படம் தான் இந்த வருடம் டுவிட்டரில் அதிகம் ரீ டுவிட் செய்யப்பட்ட படமாக முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த தகவலை டுவிட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனீஷ் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகர் விஜய்யின் செல்பி படத்தை ரசிகர்கள் மீண்டும் இணைய தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இதேபோல் இந்தாண்டு அதிகம் லைக் செய்யப்பட்ட டுவிட்டாக, அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதை அறிவித்த விராட் கோலியின் டுவிட் முதலிடத்தில் உள்ளது. மேலும் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவிட்டாக, அமிதாப் பச்சன் தனக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்த டுவிட் முதலிடம் பிடித்துள்ளது.

Similar News