சினிமா
கோலிவுட்டின் ஈ.பி.எஸ் யார் தெரியுமா?
கோலிவுட்டின் ஈ.பி.எஸ் யார் என்ற போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சுருக்கமாக ஈ.பி.எஸ் என்று அழைப்பர். நேற்று கோலிவுட்டின் ஈ.பி.எஸ் யார் என்று போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகியது. அது யாராக இருக்கும் என பலரும் யோசித்து வந்த நிலையில், அதற்கான விடையும் கிடைத்துள்ளது. ஈ.பி.எஸ் என்றால் ‘எங்க பாட்டன் சொத்து’ என்ற படத்தின் தலைப்பு என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மக்கள் அரசன் பிக்சர்ஸ் சார்பில் அழகர்சாமி தயாரிக்கும் இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் சற்குணம் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சற்குணம் இயக்கிய ‘களவாணி’, ‘வாகை சூடவா’, ‘களவாணி 2’ ஆகிய படங்களில் விமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.