புது ஹேர்ஸ்டைல் எந்த படத்திற்காக என்பதை நடிகர் சூர்யா சமீபத்திய பேட்டியில் கூறி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.
புது ஹேர்ஸ்டைல் எதற்காக? - உண்மையை சொன்ன சூர்யா
பதிவு: நவம்பர் 11, 2020 13:32
சூர்யா
சமீப காலமாக நீளமான தலைமுடியுடன் புதிய கெட்-அப்பில் சூர்யா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தற்போது சூரரைப்போற்று திரைப்படத்திற்கான புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள சூர்யாவிடம் புது ஹேர்ஸ்டைல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது: லாக்டவுன் சமயத்தில் தலைமுடியை வளர்த்தேன். கவுதம் மேனனுடனான என் அடுத்த படத்தில் இந்த ஹேர்ஸ்டைலில் தான் நடிக்க இருக்கிறேன். கவுதம் மேனன் படத்திற்காக தீபாவளி முடிந்ததும் 5 முதல் 10 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்கிறேன்.
மேலும் இதே ஹேர்ஸ்டைலில் வேறு ஒரு இயக்குனரின் படத்திலும் நடிக்கிறேன் என்றார். யார் அந்த இயக்குனர் என்று கேட்டதற்கு சூர்யா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
சூர்யா அடுத்ததாக மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரிக்கும் நவரசா என்கிற ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். பின்னர் பாண்டிராஜ் இயக்கும் படத்திலும், வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்திலும் நடிக்க உள்ளார்.