சினிமா
நயன்தாரா

நயன்தாராவிற்கு உதவிய கிரிக்கெட் வீரர்

Published On 2020-11-10 19:00 IST   |   Update On 2020-11-10 19:00:00 IST
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவிற்கு பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் உதவி செய்து இருக்கிறார்.
நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளை ஆர்ஜே பாலாஜி விறுவிறுப்பாக கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், நயன்தாராவின் ’மூக்குத்தி அம்மன்’ படம் வெற்றியடைய தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து வீடியோ ஒன்றில் கூறியதாவது:

ஆர்ஜே பாலாஜி அவர்களுடைய ’மூக்குத்தி அம்மன்’ தீபாவளி அன்று ரிலீசாக உள்ளது. நான் இந்த படத்திற்காக ரொம்ப ஆவலாக காத்திருக்கின்றேன். நான் மட்டுமன்றி என்னுடைய குடும்பமும் என்னுடைய ஊர் பொதுமக்களும் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.



ஏனெனில் ஆர்ஜே பாலாஜி அவர்களின் கமெண்ட்ரிக்கு எங்கள் ஊர் பொதுமக்கள் மிகப்பெரிய ரசிகர்களாகிவிட்டனர். அவருடைய கமென்ட்ரி அவ்வளவு சூப்பராக இருந்தது. எனவே அந்த படத்திற்காக நாங்கள் எல்லோரும் காத்திருக்கின்றோம் என்று கூறியுள்ளார். 

Similar News